< குருமாவில் தேவைக்கதிகமாகக் காரம் சேர்ந்துவிட்டால் ஒரு கப் தயிர் சேர்த்து லேசாகக் கொதிக்கவிடவும். காரம் குறைந்து விடும்.
< ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால்; ஆப்பம் மென்மையாக இருக்கும்.
< சுவையான சப்பாத்தி செய்ய வேண்டும் என்றால் சம அளவு கோதுமை மாவையும், பார்லியையும் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
< மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வென்னீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றிவிட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
- கே.பிரபாவதி
< காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.
- மு.சுகாரா
< கறுப்பு உளுந்தில் தோசைமாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்தில் குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது. எனவே தோலோடு கூடிய உளுந்தையே ஊற வைத்து தோல் நீக்கி பயன்படுத்தினால் இட்லி பூ மாதிரி கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

